திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை
அருளியவர் : திருமங்கை ஆழ்வார்
பாசுர எண் : 2050
திவ்ய தேசம் : திருக்கச்சி திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்) திருக்கண்டியூர் திருப்பேர் நகர் திருமெய்யம்
திருக்குறுந்தாண்டகம் : 19
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்
முண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்* உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே !
கார் யானை இடர் கடிந்த கற்பகம் !
அருளியவர் : திருமங்கை ஆழ்வார்
பாசுர எண் : 1088
திவ்ய தேசம் : திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)
பெரிய திருமொழி : 2-5-1
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
படுகடலில் அமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருதம் இறநடந்த பொற்குன்றினை*
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
