ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:

ஏனோ மனமே இனிமேலாகிலும்...

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை...

ராமானுஜர் கிளிக்கண்ணி !

ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி !...

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே...

பிரிவு:ஆழ்வார்கள்

 

  ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.   திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே...    ஈயாடுவதோ கருடர்க்கெதிரே ! இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ ! நாயாடுவதோ நரகேசரி முன் ? அழகூர்வசி...

கண்ணபுரத்தென் கருமணியே !

அருளியவர் :குலசேகர ஆழ்வார்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்தென் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.
(பெருமாள் திருமொழி - 8.1)

 

பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஏப்ரல் 2013

 

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு...

(திருப்பாவை - 1 )

1 . நந்தகோபன் குமரன்

2 . யசோதை இளஞ்சிங்கம்

3 . கார்மேனியன்

4 . செங்கண்(ணன்)

5 . கதிர் மதிய முகத்தான்

6 . நாராயணன்

(திருப்பாவை - 2 )

7 . பாற்கடலில் பையத் துயின்றோன்

8 . பரமன்

(திருப்பாவை - 3 )

9 . ஓங்கி உலகளந்தோன்

10 . உத்தமன்

(திருப்பாவை - 4 )

11 . ஆழி மழைக் கண்ணன்

12 . ஊழி முதல்வன்

13 . பாழியந் தோளுடையோன்

14 . பற்பநாபன் (பத்மநாபன்)

(திருப்பாவை - 5 )

15 . மாயன்

16 . வடமதுரை மைந்தன்

17 . யமுனைத் துறைவன்

18 . ஆயர் குலத்தோன்

19 . அணி விளக்கு

20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்

21 . தாமோதரன்

22. போய பிழையும் புகு தருவான்

(திருப்பாவை - 6 )

21 . புள்ளரையன்

22 . பேய் முலை நஞ்சுண்டான்

23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்

24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்

25 . வித்து

(திருப்பாவை - 7 )

26 . நாராயணன் மூர்த்தி

27 . கேசவன்

(திருப்பாவை - 8 )

28 . மாவாய் பிளந்தான்

29 . மல்லரை மாட்டியோன்

30 . தேவாதி தேவன்

(திருப்பாவை - 9 )

31 . மா மாயன்

32 . மாதவன்

33 . வைகுந்தன்

34 . நாமம் பல உடையோன்

(திருப்பாவை - 10 )

35 . நாற்றத் துழாய் முடியன்

36 . நாராயணன்

37 . போற்ற பறை தருவான்

38 . புண்ணியன்

(திருப்பாவை - 11 )

39 . குற்றம் ஒன்று இல்லாதவன்

40 . கோவலன்

41 . முகில் வண்ணன்

(திருப்பாவை - 12 )

43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்

44 . மனதுக்கினியான்

(திருப்பாவை - 13 )

45 . புள்ளின் வாய் கீண்டான்

46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

(திருப்பாவை - 14 )

47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

48 . பங்கயக் கண்ணான்

(திருப்பாவை - 15 )

49 . வல் ஆனை கொன்றான்

50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்

51 . மாயன்

(தொடரும்)