ஆசார்ய வைபவம்

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை பஜித்தாராம் !

திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்
திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)

அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை

அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !

துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை
தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)

"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !

வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு
உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

 

ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !
பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
 

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !
வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !
எங்கள்  இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்
உய்யும் வழி அதுவே --- கிளியே !
எங்கள் இராமானுசனடி -- அது
யதிராஜன் திருவடியே !

 

 

நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகுக்கு அளித்த பெருமை வாய்ந்த ஆசார்யர் நாதமுனிகளுக்கு, வருடா வருடம் அவருடைய அவதாரத் திருத்தலமான வீரநாராயணபுரம் காட்டுமன்னார் கோயிலில் உற்சவம் நடைபெறுவது வழக்கம். சமீபத்தில் நடந்து முடிந்த நாதமுனிகள் உற்சவம் பற்றியும், நாதமுனிகள் எவ்வாறு ஆழ்வாரின் அருளிச் செயல்களை நம்மாழ்வாரிடமிருந்து பெற்று நமக்கு அளித்தார் என்பதையும், நாதமுனிகள் எவ்வாறு பாசுரங்களை அரையர் சேவையைத் தொடங்கி வைத்தார் என்பதையும், நேற்று ஹிந்து பத்திரிக்கையில் கட்டுரையாக வெளி வந்துள்ளது.