இசைவடிவில் திவ்ய பிரபந்த பாசுரங்களை கேட்கலாம்.

திருவாய்மொழி அமுதம்

தேவகானம்

திருவெழுகூற்றிருக்கை

திருவாசிரியம்

திருச்சந்த விருத்தம்

STD Pathasala products page

STD PATHASALA PRODUCT - DEVAGANAM

Nearly 400 Pasurams from Divya Prabandham rendered with intense devotion in musical form.

Comes along with a book that contains the Carnatic notes for all the pasurams rendered.

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஜனவரி 2014.

12-1-2014 முதல் 22-1-2014 வரை நடைபெற உள்ள தேவகான உற்சவ நிகழ்ச்சி நிரலை உள்ளே காண்க.

அனைவரும் வருகை தருவீர். திருநாரணன் அருளைப் பெறுவீர்.

நமோ நாராயண !

चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)


சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)

[பொருள்]

மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.

அஹம் நான்
மந்த மந்த ஹசித புன்முறுவல் பூக்கும்
ஆநநாம்புஜம் தாமரைத் திருமுகத்தானும்
நந்தகோப தநயம் நந்தகோபரின் திருமகனும்
பராத்பரம் மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்)
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான
ஹரிமேவ (ஹரிம் ஏவ) ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே
ஸந்ததம் எப்பொழுதும்
சிந்தயாமி சிந்தித்திருக்கிறேன்

ஏனோ மனமே இனிமேலாகிலும்

எம்பெருமானாரை பஜியாயோ !

வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை

தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)


திருநாராயண புரத்தில் வந்து

திருநாரணரை பஜித்தாராம் !

திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்

திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)


அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை

அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !

துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை

தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)


"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட

தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !

வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு

உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

MP3 Version


ராகம்: செஞ்சுருட்டி

ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !

ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !

பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !


தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !

பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !

வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !

எங்கள் இராமானுசனடி ! கிளியே !

ஸ்வாமி யதிராஜனடி !

சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்

உய்யும் வழி அதுவே --- கிளியே !

எங்கள் இராமானுசனடி -- அது

யதிராஜன் திருவடியே !

ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.

திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே...

ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !

இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !

நாயாடுவதோ நரகேசரி முன் ?

அழகூர்வசி முன் பேயாடுவதோ !

பெருமான் வகுளாபரணன் அருள்

கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்

ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !

மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013.

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

Newsletter in pdf format in languages Tamizh and English.

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் அம்சம் அவதார ஸ்தலம்
1 பொய்கை ஆழ்வார் பாஞ்சசன்னியம் (சங்கு) பொற்றாமரைக் குளம், திருவெஃகா
2 பூதத்தாழ்வார் கௌமோதகம் (கதை)

திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்)

3 பேயாழ்வார் நாந்தகம்(வாள்) ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
4 திருமழிசை ஆழ்வார் ஆழி (சக்கரத்தாழ்வார்) திருமழிசை
5 நம்மாழ்வார் சேனை முதலியார் திருக்குருகூர்
6 மதுரகவி ஆழ்வார் நித்யஸூரி குமுதர் திருக்கோளூர்
7 பெரியாழ்வார் கருடாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூர்
8 ஆண்டாள் பூமாதேவி ஸ்ரீ வில்லிபுத்தூர்
9 குலசேகர ஆழ்வார் கௌஸ்துபம் திருவஞ்சிக்களம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி (வனமாலை) திருமண்டங்குடி
11 திருப்பாணாழ்வார் ஸ்ரீவத்ஸம் உறையூர்
12 திருமங்கை ஆழ்வார் சார்ங்கம் (வில்) திருக்குறையலூர் (திருவாலி)

ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்

azhvargal-panniruvar-signal.ogg

azhvargal-panniruvar-signal.mp3

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் மாதம் நக்ஷத்திரம்
1 பொய்கை ஆழ்வார் ஐப்பசி திருவோணம்
2 பூதத்தாழ்வார் ஐப்பசி அவிட்டம்
3 பேயாழ்வார் ஐப்பசி சதயம்
4 திருமழிசை ஆழ்வார் தை மகம்
5 நம்மாழ்வார் வைகாசி விசாகம்
6 மதுரகவி ஆழ்வார் சித்திரை சித்திரை
7 பெரியாழ்வார் ஆனி சுவாதி
8 ஆண்டாள் ஆடி பூரம்
9 குலசேகர ஆழ்வார் மாசி புணர்பூசம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் மார்கழி கேட்டை
11 திருப்பாணாழ்வார் கார்த்திகை ரோகிணி
12 திருமங்கை ஆழ்வார் கார்த்திகை கார்த்திகை

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு. (நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)

Sl Num வகை/காரணம் பிரபந்தம்
1 ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு
2 அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி
3 ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந்தாதி
4 பாடியவர்களாற் பெயர் பெற்றவை பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி
5 அளவால் பெயர் பெற்றவை பெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை
6 பாவாற் பெயர் பெற்றவை திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்
7 செயலாற் பெயர் பெற்றவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி
8 தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை
9 சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி

ராகம்: மலஹரி

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும் !

ராமானுசன் பணி மனமே !

சகல உயிரும் சமம் என்று சொல்லி

திருநாரணன் நாமம் கற்பித்த

ராமானுசன் பணி மனமே !


அதிசயமாய், ஆதிசேஷனாய்,

அரவணையாய் அவதரித்த

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும்

ராமானுசன் பணி மனமே !


ராமனுக்கும் இளையவனாம் !

கண்ணனுக்கு மூத்தவனாம் !

கலியுகத்தில் யதிராசனாம் !

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும்

ராமானுசன் பணி மனமே !